கனடாவில் வசித்துவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மார்க்கம் நகரிலிருந்து யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைச் சேர்ந்த மதன் மகாலிங்கம் என்ற 45 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இந்த நிலையில் துரித விசாரணைகளை மேற்கொண்ட யோக் பொலிஸார் அவர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments