கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்தை கண்டிப்பபதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருணாகல் பகுதியில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் மஹிந்த ராஜபக்ச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பேசிய அவர்,
பௌத்தம், கிறிஸ்தவம், இந்து அல்லது முஸ்லிம் மதத் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையிலான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனக்கு தெரிந்த வகையில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எந்தவொரு தருணத்திலும் அரசியல் செய்தது கிடையாது. கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சில ஆலோசனை வழிகாட்டல்களை மட்டுமே வழங்கியிருந்தார்.
இவ்வாறான கூற்றச்சாட்டுக்களை வெளியிடுவோர் அதற்கு ஆதரவளிப்போர் போன்றோருக்கு எதிராக கட்சிகளின் தலைவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
0 Comments