நான் கொரோனாவை விட மோசமான மனிதன் இல்லை எனவும் அதை நான் உவமைக்காகவே தேர்தல் பிரச்சார மேடையில் கூறினேன் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசார மேடையில் அவர் கூறிய கூற்று உலகளாவிய ரீதியில் பேசுபொருளாகி இருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில், இன்றையதினம் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் பிரசாரத்திற்காக யாரென்றே தெரியாத தமிழ் தேசிய கூட்டமைப்பின் தவிசாளர் கூறியிருந்தார் கருணா கொரோனாவை விட கொடியவர் என்று.
பிரசார மேடையில் ஒரு உவமைக்காகவே நாம் ஒரே இரவில் 2000 தொடக்கம் 3000 வரையிலான ஸ்ரீலங்கா இராணுவ வீரர்களை கொலை செய்ததாக கூறினேன். அது தான் உண்மை.
தற்போது அரசியல் ரீதியாக, ஒரு ஜனநாயக ரீதியாக ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று ஒரு இனத்துவேசம் இல்லாத ஒரு அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறேன்.
என்னைப்பற்றி பேசுவதற்கு யாருக்கும் அருகதை இல்லை. ஒரு கருவியாக என்னை பயன்படுத்தி அரசியல் நடத்தி வருகின்றனர். நான் பிழை விடவில்லை ஆகையால் என்னைக்கைது செய்ய முடியாது.
என்னை கேலியாக பேசும் முக்கியமான நபர்களின் காணொளிகள் இருக்கிறது தேவைப்படின் வெளியிடவும் தயாராக இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments