Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

வவுனியாவில் விசமிகளின் வெறியாட்டம்! களத்தில் குற்றத்தடுப்பு பொலிஸார்






வாகன திருத்தகத்தில் நிறுத்திவைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. வவுனியா கற்குளம் பகுதியில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் நிறுத்திவைக்கபட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் இனந்தெரியாத விசமிகளால் இன்று அதிகாலை எரியூட்டபட்டுள்ளன.

குறித்த வாகன திருத்தகம் மூடப்பட்டிருந்த நிலையில் இன்றயதினம் அதிகாலை அங்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் பழுது பார்பதற்காக நிறுத்திவைக்கபட்டிருந்த 6 மோட்டார்வண்டிகளை தீயிட்டு எரித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக வாகன திருத்தகத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டநிலையில், அவரால் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment

0 Comments