Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

அப்படியொரு நோக்கமோ எண்ணமோ எனக்கு இல்லை! குமார் சங்ககார பதில்



கோல்ஃப் மைதானம் அதன் உறுப்பினர்களுக்கு சொந்தமானது. அதனை சொந்தமாக்கி கொள்ளும் எண்ணமோ, நோக்கமோ எனக்கு இருந்ததில்லை என முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, நுவரெலியா கோல்ஃப் மைதானம் தொடர்பாக தெரிவித்திருந்த விடயம் சம்பந்தமாக நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

வேலைத்திட்டம் ஒன்றுக்காக 20 வருட காலத்திற்கு நுவரெலியா கோல்ஃப் மைதானத்தை நான் கோரவில்லை.

கோல்ஃப் மைதானம் அதன் உறுப்பினர்களுக்கு சொந்தமானது. அதனை தான் சொந்தமாக்கி கொள்ளும் எவ்விதமான எண்ணமோ, நோக்கமோ எனக்கு இருந்ததில்லை.

விளையாட்டு சுற்றுலாத் திட்டம் ஒன்றுக்காக நுவரெலியா கோல்ஃப் மைதானத்திற்கு அருகில் உள்ள சிறிய காணியை வழங்குமாறு கோரி, சில வருடங்களுக்கு முன்னர் அறிக்கை ஒன்றை வழங்கியிருந்தேன் என்றார்.

Post a Comment

0 Comments