உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனைக் கடந்துள்ளது. அதற்கமைய இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,086,465ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ், பெரும் மனித பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.
உலகளவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 406,126 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 7,086,465 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்தோடு, தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 3,460,171 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தொடந்தும் அமெரிக்கா விளங்குகின்றது. இதுவரை அமெரிக்காவில் 2,007,449 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 112,469 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேஸில், ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.
பிரேஸிலில் புதிதாக 813 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புக்களின் மொத்த எண்ணிக்கை 37,312 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு இதுவரை 691,962 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் ரஸ்யாவில் இந்த வைரஸ் காரணமாக 467,673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், 5,859 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர நாளாந்தம் அதிக உயிரிழப்புக்களை எதிர்கொள்ளும் நாடுகளில் மெக்ஸிகோவும் பதிவாகியுள்ளது. அதன்படி அங்கு புதிதாக 188 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புக்களின் மொத்த எண்ணிக்கை 13,699 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் அங்கு புதிதாக 3,484 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 117,103 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments