Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

தபால்மூல வாக்காளர்களின் 47952 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!



நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தபால்மூல வாக்களிப்பிற்காக இம்முறை 7 இலட்சத்து 53 ஆயிரத்து 37 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் 7 இலட்சத்து 5 ஆயிரத்து 85 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் 47 ஆயிரத்து 952 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 14,15,16,17 திகதிகளில் இடம்பெறவுள்ளதுடன், மேலதிக நாட்களாக 20 மற்றும் 21 ஆகிய தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்கெண்ணும் பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பிலான ஒத்திகை நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments