சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் புத்தளம் மாவட்டத்திற்கு போட்டியிடும் வேட்பாளரையே பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
தேர்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டிலேயே குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட வேட்பாளரிடமிருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரித்தனர்.
0 Comments