முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 222 கடற்படையினர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரேனா வைரஸ் தொற்று தாக்கத்தினை தொடர்ந்து வெலிசறை கடற்படை முகாமினை சேர்ந்த 250 கடற்படையினர் கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் கடந்த 40 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 222 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் 27 பேர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.
223 கடற்படையினரிடம் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவர்களில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இந்நிலையில் 222 பேரும் கடற்படைக்கு சொந்தமான 05 பேருந்துக்களில் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments