ஜூன் மாதம 20 ஆம் திகதி நடைபெறவருந்த 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (10) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இதுதொடர்பில் ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ,இதற்கான வர்த்தமானி அறிவிப்பு கையெழுத்திடப்பட்டு அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாக கூறினார்.
0 Comments