2015 ம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்திற்கு சூழ்ச்சியே காரணமென பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான உள்நாட்டு, வெளிநாட்டு சதிகளை தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் இன்று விசேட நிகழ்வு இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
நாட்டின் எதிர்காலத்திற்கென உள்நாட்டு வெளிநாட்டு சதிகளை தோல்வியடையச் செய்ய வேண்டும்.
அத்துடன் கடந்த பல வருடங்களாக நாட்டிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு சூழ்ச்சிகள் தொடர்பிலும் பிரதமர் இதன்போது தெளிவுபடுத்தினார்.
சிறிய காரணங்களை காட்டி நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பது அவதான நிலைக்குரியதென பிரதமர் மேலும் தெரிவித்தார்.
0 Comments