Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஊடக அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தை பொறுப்பேற்கும் இறுதிதினம் ஜுன் மாதம் 20ஆம் திகதி



நாட்டில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக 2020 மார்ச் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் அலுவலகங்கள் மூடப்பட்டமை, தபால் சேவை இடம்பெறாமை, அவசரகாலசட்டம் போன்றவற்றின் காரணமாக ஊடக அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தை அரசாங்க தகவல் திணைக்களத்திடம் இதுவரையில் கையளிக்கமுடியாமல் போன நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்காக விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

2019 /11 /28 திகதி இலக்கம் 2151/41 கீழான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்புக்கு அமைவாக, விண்ணப்ப படிவத்துடன் தேவையான ஆவணங்களை பூர்த்திசெய்து மேற்குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் விண்ணப்பத்தை அரசாங்க தகவல் திணைக்களத்திடம் கொண்டுவந்து ஒப்படைக்குமாறு அறிவிப்பதுடன் அன்றைய தினத்திற்குப் பின்னர் 2020 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான காலஎல்லை மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என்பதை தயவுடன் அறிவிக்கின்றோம்.

நாலககலுவௌ
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்

Post a Comment

0 Comments