Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

சீனாவை உலுக்கும் மரணங்கள்: எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறியதில் 19 பேர் பலி!



சீனாவின் கிழக்கு பிராந்தியத்திலுள்ள ஜேஜியாங் மாகாணத்தின் வென்லிங் நகரில் எரிபொருள் தாங்கி ஒன்று வெடித்துச் சிதறியதில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 172 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று நெடுஞ்சாலையொன்றில் சென்று கொண்டிருந்த எரிபொருள் தாங்கி வெடித்ததில் அருகில் இருந்த வீடுகள், தொழிற்சாலைகள் சேதமடைந்ததுடன், பாரிய தீ பரவி பல வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 172 பேரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸாரால் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments