Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கொவிட்-19 நெருக்கடியின் விளைவுகளை சமாளிக்க அமெரிக்காவும், கனடாவும் நிதியுதவி



கொவிட்-19 தொற்றுநோய் நெருக்கடியை சமாளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவும், கனடாவும் நிதியுதவி வழங்கியுள்ளன.

அமெரிக்க அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் யுனிசெப் நிறுவனம் ஊடாக ஆறு இலட்சம் டொலர்களை வழங்கியிருக்கிறது. ஆபத்து அதிகமாகவுள்ள சுகாதார நிலையங்களில் இடர்த் தொடர்பாடல், சமூக ஈடுபாடு, கை கழுவுதல், தொற்றைக் கட்டுப்படுத்தல், நீர்-மலசலகூட வசதிகளை விருத்தி செய்தல் போன்ற பணிகளுக்காக நிதியுதவி பயன்படுத்தப்படும். இதற்காக அரசின் துணையுடன் யுனிசெப் நிறுவனம் திட்டமொன்றை அமுலாக்குகிறது.

கனேடிய அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் ஊடாக நான்கு இலட்சம் கனேடிய டொலர்களை வழங்கியிருக்கிறது. இதற்குரிய உடன்படிக்கை நேற்று முன்தினம் கைச்சாத்திடப்பட்டது. பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள பெண்களும், சிறுமிகளும் கொவிட்-19 நெருக்கடி காலத்தில் குடும்ப வன்முறைகள் மற்றும் இனவிருத்தி சுகாதாரம் தொடர்பான முக்கியமான சேவைகளை பெற வழிவகுப்பது  இந்த உதவித் தொகையின் நோக்கம்.

Post a Comment

0 Comments