Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

குறைந்தது 100 வழக்குகளாவது தாக்கல் செய்யப்படவேண்டும்! தென்னிலங்கையில் எழுந்தது எதிர்ப்பு



முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்ட தகவலுக்கு எதிராக குறைந்த பட்சம் 100 வழக்குகளையாவது தாக்கல் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அவன்காட் நிறுவன மோசடி குறித்து கடந்த காலங்களில் பல தகவல்களை வெளியிட்டு வந்த முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இன்றைய தினம் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டமை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகினர்.

அவன்காட் நிறுவனத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய வாக்குமூலம் பெறுவதற்கான அழைப்பு அண்மையில் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டது.

இதற்கமைய அவர்கள் மூவரும் இன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்த பின், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது வெள்ளைவான் கடத்தலின் போது கொலை செய்யப்பட்ட நபர்கள் குறித்த தகவலை வெளியிட்ட எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த அரசாங்கம் ஏன் கருணாவுக்கு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லையென கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

கடற்படைக்கு பெற வேண்டிய கோடிக்கணக்கான வருமானம் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தமைக்கு எதிராகவே நாங்கள் கருத்துரைத்தோம். அதுகுறித்த விசாரணையே இன்று இடம்பெற்றது.

நான் கூறிய கருத்துக்களுக்கு எனக்கெதிராக வழக்கு தாக்கல் செய்தார்கள் என்றால், கருணா கூறிய கருத்துக்களுக்கு எதிராக குறைந்த பட்சம் 100 வழக்குகளையாவது தாக்கல் செய்திருக்க வேண்டும்.

நான் படுகொலை செய்யப்பட்ட நபர்களின் பட்டியலைத் தான் தெரிவித்தேன். அது தவறு என்றால் 2000 அல்லது 3000 பேரைக் கொலை செய்ததாகக் கூறிய நபருக்கெதிராக என்ன நடவடிக்கை எடுப்பார்கள்?

ஆகவே குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்னும் ஒரு வருடங்களுக்கு கருணாவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளையே தான் நடத்தவேண்டும் என அவர் காட்டம் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments